தமிழா! தமிழா! எத்தனை வளர்ச்சி! எத்தனை! வளர்ச்சி!
டாஸ்மாக் விற்பனையில் எத்தனை வளர்ச்சி!
அரசுக்கடன் அளவில் எத்தனை வளர்ச்சி!
விலை வாசி வளர்ச்சி எத்தனை வளர்ச்சி!
இதில் உன் வளர்ச்சி எத்தனை எத்தனை ?
"தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"-என
நான் பாடிய பின் தமிழே உன் வளர்ச்சி எத்தனை எத்தனை?
தமிழன் வளர்ந்தனா? அல்லது தமிழ்தான் வளர்ந்ததா?
என் இனிய தமிழன்னையே "மெள்ளத் தமிழ் இனிச் சாகும்" என்று நான் பாடியது தவறுதான் அதற்காக இப்படியா?
இறந்த பின்னும் இப்படி புலம்ப வைத்துவிட்டனரே!
தாயே அன்று நல்ல பலதலைவர்களைப் பெற்று என் தமிழ்ச்சமுதாயத்தை
அந்நியனுக்கு எதிராக புயலென ஆர்த்தெழ வைத்தாய்!
இன்று மீண்டும் எம்மக்கள் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய்
தர்மம் மறந்து ஆண்மை மறந்து செயலிழந்து வருவது வரட்டும் நாம் என் செய்வோம் என இருக்கும் நிலை மாற்றாயோ ? சுபாஷைப்போல் வீர சிவாஜிபோல் தலைவர்கள் ஆயிரம் வரட்டும் நல்ல தலைமைக்கு இங்குள்ள வறட்சி உடனே தொலையட்டும் !
சக்தி கொடு மக்களுக்கு தமிழ் மக்களுக்கு சக்தி கொடு
சமுதாய மாற்றம் காண சக்தி கொடு
எழுச்சி கொடு சிறுமையும் பேடிமையும் போக்கி ஆண்மையூட்டு !
சமுதாயப் பிணி போக்கும் ஆற்றல் கொடு !