Monday 29 December 2014

அனைவருக்கும்  என்  பணிவான  வணக்கங்கள் !
2014ல் நம் செய்தித்தாள்களில் நாம் அறிந்த விடயங்கள் நிகழ்வுகளை  நாம் நினைவு கூர்ந்தால் நம் வருங்கால சந்ததியர் சரியான பாதையில் போவதாக உணர்கிறோமா? நம் பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்கிறதா? 2014 குற்றவாளிகளில் எத்தனை பேர் படித்தவர்கள்? மகிழ்ச்சி தரக்கூடியது என்பதற்காக கூட்டமாக சேர்ந்து செய்வது எல்லாம் சரியாகி விடுமா? சரியனது என நாமாகவே முடிவு செய்யலாமா ?
வலைதளங்களில் நம்மவரின் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஏன்  முயலக்கூடாது? நம் பாரம்பரிய வழக்கங்களை நாம் ஏன் பிறர் அறிய பகிர்தல் கூடாது ? இன்றைய இளைஞர்கள் நமது பண்பாட்டு விடயங்களை அறியவிடாது தடுப்பது வலைதளங்களும் சினிமாவும்தான் என்பதை யார் உணரவல்லோம்? யாராவது இதை எல்லாம் சரி செய்ய வர மாட்டார்களா என எத்தனை பேருக்கு தோன்றுகிறது? அவர்கள் இந்த தளத்தில் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்

Sunday 13 March 2011

பாரதியின் ஆவி புலம்புகிறது

தமிழா! தமிழா! எத்தனை வளர்ச்சி! எத்தனை! வளர்ச்சி! 
டாஸ்மாக் விற்பனையில் எத்தனை வளர்ச்சி!
அரசுக்கடன் அளவில் எத்தனை வளர்ச்சி! 
விலை வாசி வளர்ச்சி எத்தனை வளர்ச்சி!
இதில் உன் வளர்ச்சி எத்தனை எத்தனை ?
"தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"-என 
நான் பாடிய பின் தமிழே உன் வளர்ச்சி எத்தனை எத்தனை?
தமிழன் வளர்ந்தனா?   அல்லது தமிழ்தான் வளர்ந்ததா?
என் இனிய தமிழன்னையே "மெள்ளத் தமிழ் இனிச் சாகும்" என்று நான் பாடியது தவறுதான் அதற்காக இப்படியா?
இறந்த பின்னும் இப்படி புலம்ப வைத்துவிட்டனரே!
தாயே அன்று நல்ல பலதலைவர்களைப் பெற்று என் தமிழ்ச்சமுதாயத்தை
அந்நியனுக்கு எதிராக புயலென ஆர்த்தெழ வைத்தாய்!
இன்று மீண்டும் எம்மக்கள் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் 
தர்மம் மறந்து ஆண்மை மறந்து செயலிழந்து வருவது வரட்டும் நாம் என் செய்வோம் என இருக்கும் நிலை மாற்றாயோ ?  சுபாஷைப்போல் வீர சிவாஜிபோல் தலைவர்கள் ஆயிரம் வரட்டும் நல்ல தலைமைக்கு இங்குள்ள  வறட்சி உடனே தொலையட்டும் !
சக்தி கொடு மக்களுக்கு தமிழ் மக்களுக்கு சக்தி கொடு
சமுதாய மாற்றம் காண சக்தி கொடு 
எழுச்சி கொடு சிறுமையும் பேடிமையும் போக்கி ஆண்மையூட்டு !
சமுதாயப் பிணி போக்கும் ஆற்றல் கொடு !


Thursday 10 March 2011

Bharathiyarin kobam

என்னடா இது இன்றய பாரத மைந்தன் சுயநலமியாய் சமுதாய சிந்தனை அற்று பொய், லஞ்சம் ,காட்டி கொடுத்தல், காலை வாருதல்,  எப்படியாவது தான் மட்டும் முன்னேறி, கோடி கோடியாய் சம்பாதித்து சுவிஸ் வங்கிகளில் சுருட்டியதைப்போட்டு சுத்த அயோக்கியனாய் இருந்தும் வெள்ளை ஆடைகளில் வலம் வருவதை பார்த்தால் தருமம் நியாயம் நீதி நேர்மை என்ற வார்த்தைகள் அகராதியில் கூட இல்லாமல் போனதோ ?   படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று எழுதியதற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே !